Published : 06 Feb 2015 11:13 AM
Last Updated : 06 Feb 2015 11:13 AM

கல்லூரிகளில் அழகுப் போட்டிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் அழகுப் போட்டி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் பல்கலைக் கழக மாணவி பி.எஸ்.அக்க்ஷயாவின் தாய் லட்சுமி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது மகள் அக்க்ஷயா சென்னை யில் உள்ள தனியார் பல்கலைக்கழ கத்தில் பொறியியல் படிக்கிறார். 2013-ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின், மத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பில், டெகோஃபெஸ் கலாச்சார விழா நடைபெறுவதாக பல்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங் களில் விளம்பரம் செய்யப்பட்டது. கலாச்சார போட்டியில் பங்கேற் பதில் ஆர்வம் மிகுந்த எனது மக ளும் அந்த விழாவில் பங்கேற்றார்.

குறிப்பாக அழகன், அழகி போட் டிக்கான விதியில், கூட்டத்தைக் குஷிப்படுத்த எது வேண்டுமானா லும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுபற்றி கேட்ட போது, ஒழுக்கம், சுயமரியாதை, நன்னடத்தை போன்றவை பாதிக்கப்படாது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு இரு சக்கர வாகனம், செல்போன், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகிய பரிசுகள் வழங்கப்படும் என்றனர்.

எனது மகள், அப்போட்டியில் பங்கேற்று வென்றார். ஆனால், அறி வித்தபடி பரிசு வழங்கவில்லை. பங்கேற்பு சான்றிதழ் மட்டும் வழங் கப்பட்டது. போட்டிக்கான விதி முறைகளை பின்பற்றாததால், எனது மகள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். எனவே, வெற்றி பரிசினையும், மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.5 லட்சம் நஷ்டஈடும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த மனுவை விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இந்த கலாச்சார போட்டி குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரி முத்திரையுடன் இடம்பெற்றுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்குவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது, ஏற் புடையதாக இல்லை. மனுதாரரின் மகள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நடந்துள்ளது. அதனால், இது பற்றி தெரியாது என பல்கலைக்கழக அதிகாரிகள் கூற முடியாது.

அரசால் நிர்வகிக்கப்படும் 100 ஆண்டு பழமையான அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சியில் அழகுப் போட்டி தேவையா என்று கேள்வி எழுகிறது. இப்போட்டிகளில், கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் திறன் வெளிக் கொண்டு வரப்படுவதாக கூறப்படு கிறது. அழகுப் போட்டிக்காக சாய்தளத்தில் நடந்து வருவது எந்த விதத்தில் குறிப்பாக என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயனளிக்கிறது என்று தெரியவில்லை. இந்த வழக் கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்ச் சிகளைத் தடுப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், பல்கலைக்கழகங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை கவனிக்கவும், கட்டுப்படுத்தவும் வழிமுறைகள் உள்ளதா, எந்த அதிகாரி இதைக் கண்காணிக்கிறார், நிதி எவ்வாறு பெறப்பட்டு கையாளப்படுகிறது உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.

அதுவரை, இதுபோன்ற அழகுப் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் அல்லது நடத்தக் கூடாது என்று அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு தமிழக அரசு உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்ப கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோர் உடனடியாக சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். மனு மீது வரும் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x