துறைமுக தொழிலாளர் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்

துறைமுக தொழிலாளர் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

நாடு முழுவதும் துறைமுக தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் உட்பட நாடு முழுவதும் 12 பெருந்துறைமுகங்கள் உள்ளன. எண்ணூரை தவிர மற்ற 11 பெருந்துறைமுகங்களும் இந்திய பெருந்துறைமுக சட்டம் 1963-ன் கீழ் துறைமுக பொறுப்புக் கழகங்களாக செயல்பட்டு வருகின்றன.

பெருந்துறைமுகங்களை இந்திய கம்பெனி சட்டம் 1956-ன் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். துறைமுக தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத் துள்ளன. அந்தந்த துறைமுக நிர்வாகங்களிடம் நேற்று முறைப் படி வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று சுங்கத்துறை அலுவலகம் முன்பி ருந்து ஊர்வலமாக சென்று துறை முக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸிடம் வேலை நிறுத்த நோட்டீஸை கொடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in