Published : 27 Feb 2015 10:46 AM
Last Updated : 27 Feb 2015 10:46 AM

மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை: தமிழக கட்சிகள் வலியுறுத்தல்

மத்திய அரசு தாக்கல் செய்ய வுள்ள பொது பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என தமாகா, சமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜி.கே.வாசன் (தமாகா):

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத் துவ வசதி உள்ளிட்ட பல்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்க வேண்டும். ஏழை, எளியோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைத்துப் பிரிவினர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை முழு மானியத்தில் வழங்க வேண்டும். காற்றாலை மின்சார உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தை அதிலேயே மறு முதலீடு செய்யும்போது முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.

ஆர்.சரத்குமார் (சமக):

விவ சாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளின் வளர்ச்சிகளுக்கு ஏற்ற திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகையை 32 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தயாரித்து வழங்க வேண்டும்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்):

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி இருப்பதாக 14-வது திட்டக் குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. உண்மையில், தமிழகம் உட்பட 9 மாநிலங் களின் பங்கு 13-ம் திட்டக் காலத்தில் இருந்ததைவிட குறைக்கப்பட்டுள்ளது.

13-வது திட்டக் காலத்தில் தமிழகத்துக்கு மத்திய வரி வருவாயில் 4.969 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது 4.023 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகநலத் திட்டங்களும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x