

ஜெயலலிதா வீட்டு முன்பு போராட் டம் நடத்த வந்த மதுரை சட்டக் கல்லூரி மாணவி தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெய லலிதா வீட்டின் அருகே நந்தினி யும், அவரது தந்தை ஆனந்தும் நேற்று காலை வந்தனர். அங் கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஜெய லலிதா வீட்டு முன்பு உண்ணா விரதம் இருக்க வந்ததாக தெரி வித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்ததால் நந்தினி, அவரது தந்தை ஆனந்த் இருவரையும் தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.