Published : 12 Feb 2015 10:07 AM
Last Updated : 12 Feb 2015 10:07 AM

தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றும் லாரிகள் ஸ்டிரைக்: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

தனியார் சேமிப்பு கிடங்கி லிருந்து, தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக் கரி ஏற்றிச் செல்லும் லாரி களின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேமிப்பு கிடங்குகள்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டில் தனியார் நிலக்கரி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் நிலக்கரிகள் சேமித்து வைக்கப்படுகின்றன.

பிறகு, அந்த நிலக்கரிகளை, இறக்குமதி செய்த தனியார் அனல் மின் நிலையங்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், கும்மிடிப் பூண்டி சிப்காட் மற்றும் பாதிரி வேடு பகுதிகளில் உள்ள 8 தனியார் அனல் மின் நிலையங் கள், தங்களுக்கு தேவையான நிலக்கரியை சேமிப்புக் கிடங்கி லிருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்கின்றன.

இந்த பணியில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த லாரிகளில் அதிக அளவில் நிலக்கரிகள் ஏற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட அதிகமாக நிலக்கரிகளை லாரிகளில் ஏற்றக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

300 லாரிகள் ஸ்டிரைக்

இதனால், அதிக எடைகளில் நிலக்கரி ஏற்ற முடியாததால், லாரிகளுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. ஆகவே, லாரிகளில் ஏற்றப் படும் நிலக்கரிக்கு, டன் ஒன்றுக்கு தற்போது வழங் கப்படும் வாடகையை அதி கரித்து தர வேண்டும் என லாரிகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை முதல், 300-க்கும் மேற்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தனியார் அனல் மின் நிலைய உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இந்த போராட்டம் நீடித்தால், தனியார் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x