Published : 09 Feb 2015 08:44 AM
Last Updated : 09 Feb 2015 08:44 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது அதிமுக-பாஜக இடையே கடும் மோதல்; கல்வீச்சு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நேற்று அதிமுக- பாஜகவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கல் வீசித் தாக்கிக் கொண்டனர். அதிமுகவினரைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் 13-ம் தேதி ரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை ரங்கம் கோயில் பகுதியில் பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வீரேஸ்வரத்தில் பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று, வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த சிலரும் அங்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில், பாஜகவினரைப் பார்த்து அதிமுகவினர் வாக்கு கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் கல் வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாஜக பிரமுகரின் காரும் சேதமடைந்தது. பாஜவினரின் கொடிகளை அதிமுகவினர் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்து பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் தலைமையில் ரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் முன் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் தங்கியுள்ள வெளியூர் நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும், பாஜகவினரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர்கள் கோஷமெழுப்பினர்.

அங்கு வந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர், “வெளியூர் நபர்கள் மாலைக்குள் வெளியேற்றப்படுவார்கள், தாக் குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதையடுத்து பாஜகவினர் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

இதேபோல, கம்பரசம்பேட்டை யில் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினருக்கும், அதிமுக வினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, அதிமுகவின ரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி-கரூர் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x