சர்வதேச திரைப்பட சுற்றுலா கூட்டம்

சர்வதேச திரைப்பட சுற்றுலா கூட்டம்
Updated on
1 min read

இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் 3-வது இந்திய சர்வதேச திரைப்பட சுற்றுலா கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்வது தொடர்பாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தை நடத்துகிறது.

இக்கூட்டத்தில் கென்யா, ஃபிஜி, ஓமன், ஜோர்டான், தைவான் போன்ற நாடுகள் பங்கேற்றன. மேலும் குஜராத், கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங் களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம், எஸ்.தாணு, சந்தோஷ் சிவன் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.

இந்திய திரைப்பட கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் சுப்ரன் சென் கூறும்போது, “இதில் 20-க்கும் அதிகமான வெளி நாடுகளைச் சேர்ந்த திரைப்பட ஆணையங்கள் பங்கேற்றன. இந்த கூட்டம் சென்னையை அடுத்து ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடக்கவுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in