Published : 22 Feb 2015 10:30 AM
Last Updated : 22 Feb 2015 10:30 AM

பன்மொழிக் கலாச்சாரம் இந்தியாவின் சொத்து: சென்னை விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெருமிதம்

பன்மொழிக் கலாச்சாரம் என்பது இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்மிருதி இரானி பேசியதாவது:

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த பன்மொழிக் கலாச்சாரம் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து. பாரம்பரியமான பன்மொழிக் கலாச்சாரத்தை பாது காக்க வேண்டியது நமது கடமையாகும். தாய்மொழிகள் பலவாக இருந்தாலும் அவை எல்லாவற்றி லும் இருப்பது ஒரே உயிர்தான்.

நம் மொழி என்னவாக இருந் தாலும், கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் இந்தியாவை வளர்ச்சியின் புதிய எல்லைக்கு கொண்டு செல்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியது அடுத்த தலைமுறை இளைஞர்கள், குறிப்பாக இளம்பெண்களின் கடமையாகும். அவர்கள் ஒவ் வொருவரும் தாய்மொழி மீதும் தாய்நாடு மீதும் அக்கறை கொண் டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்தியாவின் அனைத்து மொழி களையும் கவுரவிக்கும் வகையில் காஷ்மீரியிலும் தமிழிலும் ஸ்மிருதி இரானி பேசினார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை’ என்று பாரதியாரின் கூற்றை நினைவுகூர்ந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘இணைய வழியில் செம்மொழித் தமிழ்’ என்ற இணைய பாடப்படிப்பை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இணையத்தின் மூலம் அகநானூறு, புறநா னூறு, கலித்தொகை உள்ளிட்ட பாடல்கள் ஆடியோ, வீடியோ உதவியுடன் கற்றுத்தரப்படும். இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் பதிப்பித்த பழங்குடியின மொழி உட்பட 22 மொழிகளிலான 1008 நாட்டுப்புற கதைகளை அமைச்சர் வெளியிட்டார். மேலும், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பு நூலையும் வெளியிட்டார்.

திருவள்ளுவரின் முதல் குறளை தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கல்லூரி மாணவிகள் வாசித்துக் காட்டினர். விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.எம்.முரளிதரன், கல்லூரி முதல்வர் ஏ.நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x