Published : 21 Apr 2014 09:00 AM
Last Updated : 21 Apr 2014 09:00 AM

‘வழிப்பறி’ கவுன்சிலர்கள் குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பூந்தமல்லி காட்டுப்பாக்கம் ஊராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

சென்னை பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமாபதி, சில நாட்களுக்கு முன்பு போரூரில் ஒரு பயணியை இறக்கிவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காட்டுப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் அருகே 3 பேர் திடீரென ஆட்டோவை வழிமறித்து, கத்திமுனையில் அவரை மிரட்டி 3 சவரன் செயின், ரூ.500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் ஆய்வாளர் ரியாசுதீன் விசாரணை நடத்தி ஜெயக்குமார், ராஜா என்ற 2 பேரை கைது செய்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பாக்கம் ஊராட்சி 12-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயக்குமாரும், 10-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜாவும் இந்த வழிப்பறி பின்னணியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். அரசியலில் பரம எதிரிக்கட்சிகளான அதிமுக, திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் இளைஞர்களை வேலைக்கு வைத்து செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற செயல்களை செய்திருப்பதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ராஜா இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதிக்கு ஆய்வாளர் ரியாசுதீன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் திரிபாதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

மாநகர காவல் ஆணையர் திரிபாதிக்கு ஆய்வாளர் ரியாசுதீன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x