

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மீது திமுக புகார் அளித்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம் தேதி அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் பந்தல் அமைத்து அதிமுகவினர் இலவச உணவு தருகின்றனர்.
பெட்டவாய்த்தலை பகுதியில் இலவச உணவு வழங்கப்பட்டது என்று திமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் புகைப்பட ஆதாரத்துடன் புகார் மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்தார்.
அதிமுகவினர் அமைத்துள்ள பந்தல்களை அகற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பந்தல்களை அகற்றாவிட்டால், உணவுக்கு ஆகும் செலவை அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பரந்தாமன் குறிப்பிட்டுள்ளார்.