

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரும் மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். வரும் மார்ச் 5-ம் தேதி அவர் மீண்டும் தமிழகம் வரவுள்ளார். அப்போது உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு மேற்கொள்வார். கோவையில் மார்ச் மாதம் நடக்கவுள்ள மாநில செயற்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என்று மாநில தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.