Published : 21 Feb 2015 10:01 AM
Last Updated : 21 Feb 2015 10:01 AM

பட்ஜெட் கூட்டத் தொடரிலும் பங்கேற்க முடியாது: தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் பேரவைத் தலைவர் விளக்கம்

தேமுதிக உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நட வடிக்கை பற்றி பேரவைத் தலை வர் நேற்று விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

தேமுதிக உறுப்பினர்கள் பேரவையில் நேற்று பெரும் குழப்பம் விளைவித்தனர். என்னை யும், அவைக் காவலர்களையும் தாக்க முற்பட்டனர். அதனால், நடப்புக் கூட்டத் தொடர் முழுவ தும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் மீது உரிமைப் பிரச்சினை கொண்டு வருவதாகவும் அறிவித்தேன்.

முதலில் அடுத்த கூட்டத்தொடர் வரை தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை திருத்தம் செய்து நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இது, யாருடைய வேண்டு கோளையும் ஏற்று எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. நடப்புக் கூட்டத் தொடர் என்பது சட்டசபை தொடங்கிய நாளில் இருந்து, கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைப்பது வரையிலான காலத்தைக் குறிக்கும். இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

இதையடுத்து திமுக சட்டமன்ற கட்சி துணைத்தலைவர் துரை முருகன் எழுந்து பேச முயன்றார்.

பேரவைத் தலைவர்:

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது பேசக்கூடாது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரமோ, கவன ஈர்ப்பு தீர்மானமோ கிடையாது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசுங்கள். அப்போது நீங்கள் தெரிவிக்க நினைப்பவற்றைக் கூறலாம்.

பேரவையில் நடந்த நிகழ்வு பற்றி, தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது. அதுபற்றி மீண்டும் விவாதிப்பது சரியாக இருக்காது.

அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்:

அதன்பிறகு துரைமுருகன் தனக்கு பேச அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் அதிருப்தி (ஜி.கே.வாசன் ஆதரவு) உறுப்பினர்கள் ரங்கராஜன், ஜான் ஜேக்கப் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைத் தலைவரின் அறிவிப்பையடுத்து, அமளியில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்கள், நடப்புக் கூட்டத் தொடரை முடித்து வைத்து தமிழக ஆளுநர் அறிவிக்கும் வரை அவை நடவடிக்கையில் கலந்துகொள்ள முடியாது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகே பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x