

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர, நுகர்வோர் பூர்த்தி செய்து கொடுக்கும் படிவத்தை வாங்குவதில் வங்கி ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொள்வதாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆதார் எண் கட்டாயம் இல்லை என்றபோதும் சில வங்கிகளில் ஆதார் எண் வேண்டும் என கூறுகிறார்கள்.
முகவரிகள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஐஓசி மற்றும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில வங்கிகள் வங்கி கணக்கு முகவரி, ஆதார் எண் அட்டையில் உள்ள முகவரி மற்றும் காஸ் சிலிண்டர் விநியோகம் செய் யப்படும் முகவரி ஆகிய அனைத்து முகவரிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நுகர்வோரிடம் வங்கிகள் வலியுறுத்துகின்றன. நேரடி மானிய திட்டத்தில் சேர வங்கி கேட்கும் அனைத்து ஆவணங் களையும் கொடுத்த பின்பும் நுகர் வோருக்கு வங்கியில் இருந்து ஆதார் எண் வழங்குங்கள் என்ற எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) அதிகாரிகள் கூறும்போது, ”நுகர் வோர் காஸ் ஏஜென்சிகளில் கொடுக்கும் படிவங்கள் உடனடி யாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கியில் இருந்து வர வேண்டிய தகவல்கள் தாமதமாகத்தான் கிடைக்கின்றன.
நுகர்வோர்கள் காஸ் மானிய திட்டத்தில் சேருவதற்கு வங்கி களின் ஒத்துழைப்பும் அவசியம். வங்கிக்குச் செல்ல முடியாத நுகர் வோர் படிவத்தை காஸ் ஏஜென்சி களில் கொடுத்தால்போதும். அதனை ஐஓசி ஊழியர்கள் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கி யிடம் ஒப்படைத்துவிடுவார்கள்” என்றார்.