Published : 14 Feb 2015 10:15 AM
Last Updated : 14 Feb 2015 10:15 AM

தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு: சிங்கப்பூரில் மே, ஜூனில் நடைபெறும்

தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர் எஸ்.மணியம் கூறியதாவது:

தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) சார்பில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பங்கேற்பாளர்கள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

பயிற்சிப் பட்டறை

இணையப் பக்கங்கள் உரு வாக்குவது, வலைப் பதிவுகள், முகநூல் போன்றவை தொடர்பாக மாநாட்டில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். கணினியில் தமிழ், கையடக்கக் கருவிகள், வலைப் பயன்பாடு ஆகியவற் றில் மாணவர்களின் திறன் களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப் படும்.

மாநாட்டில் தேசிய மொழித் தேர்ச்சி மைய நிர்வாகி முனை வர் லிசா மூர், இந்திய தொழில் நுட்ப வளர்ச்சித் துறை இயக்குநர் குமாரி சுவரன் லதா, அமெரிக்காவின் ஓக்லேண்ட் பல்கலைக்கழக தகவல் அறிவியல் துறைத் தலைவர் விஜயன் சுகுமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு எஸ்.மணியம் கூறினார்.

அண்ணாமலை பல்கலைக் கழக மொழியியல் உயர்ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் கணேசன், பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக கணிப்பொறி பேராசிரியர் ஸ்ரீராம், காந்தி கிராமப் பல்கலைக்கழக தமிழ்த் துறை துணைத் தலைவர் சி.சிதம்பரம், பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x