Published : 18 Apr 2014 10:41 AM
Last Updated : 18 Apr 2014 10:41 AM

திறந்திருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும்: பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசு உத்தரவு: உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை

தமிழககத்தில் தொடரும் குழந்தை கள் உயிரிழப்புச் சம்பவங்களைத் தடுக்க தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடவேண்டும் என்று 12,620 பஞ்சாயத்து அமைப்பு களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பல அடிகள் ஆழத்துக்கு தோண்டியும் தண்ணீர் கிடைக்காத தால் அப்படியே விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து குழந்தைகள் பலியாகும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தமிழகத்தில் இதுபோன்று திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணறு களில் மூன்று குழந்தைகள் விழுந் துள்ளனர். இதில், சங்கரன்கோவில் அருகேயுள்ள குத்தாலப்பேரியை சேர்ந்த் ஹர்சன் (3) மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத் தான். ஆனால் மற்ற இரு குழந்தை களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிராமசபை கூட்டத்தில்

தமிழகத்தில் தொடர்கதை யாகிவரும் இதுபோன்ற சம்பவங் களைத் தடுக்க மாநில அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் தொடரும் ஆழ் துளைக் கிணறு சம்பவங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வது தவறு. கடந்த ஜனவரி மாதத்தில் கூட தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்த கிராமசபைக் கூட்டங்களில் இதை ஒரு பொருளாக வைத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு கலசப்பாக்கத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இருப்பினும், அச்சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ஆழ் துளைக் கிணறுகளை மூடுங்கள் என்று பொதுமக்களுக்கு அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வேண்டு கோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த சோக சம்பவம் நடந்து விட்டது. என்னதான் அரசு கடும் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, பயன்தராத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு

இதுபோன்ற சம்பவங் கள் இனி நடக்காமல் தடுக்கும் நோக்கில், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் புதன்கிழமை நடந்தது. அந்த கூட்டத்துக்குப் பிறகு, அனைத்து ஆட்சியர்களிடமும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி (12620) அமைப்புகளும், தங்களது பகுதிகளில் திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக மூடப்பட்டுவிட்டனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x