

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர் வயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியர், நேற்று முன்தினம் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினர்.அப்போது கூடலூர் பஜாரில் இரவு உணவு வாங்க கணவன் சென்றார். தனியாக நின்ற அவரது மனைவியிடம் உதகை ஆயுதப்படை பிரிவில் பணிபுரி யும் போலீஸார் நாகேந்திரன், ராஜ் குமார், கேசவன் மற்றும் சிவா ஆகி யோர் தரக்குறைவாக நடந்தனராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப் பெண், ஓட்டலுக்கு சென்ற கணவரை அழைக்க முயன்றபோது நாகேந்திரன் அப்பெண்ணை தாக்கினாராம். உடனிருந்த போலீஸாரும் அப் பெண்ணை தாக்கி, அவரது சேலையை கிழித்தனராம். மனைவியைக் காப்பாற்ற வந்த கணவரையும் தாக்கியுள்ளனர்.
கணவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்தனர். காயமடைந்த கணவன், மனைவியை போலீஸார் பிடியிலிருந்து மீட்டனர். மக்களைக் கண்டதும் போலீஸார் தப்பி ஓட முயன்றனர். நாகேந்திரன் மட்டும் சிக்கினார்.
படுகாயமடைந்த கணவனும், மனைவியும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டனர். நாகேந்திரன் கூடலூர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். போதையில் பெண்ணை மானபங்கப் படுத்த முயன்ற போலீஸாரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கோபி, கோட்டாட்சியர் விஜயபாபு ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.
போதையில் பெண்ணை மானப் பங்கப்படுத்திய போலீஸாரை கைது செய்யக் கோரி திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், வாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள்) சையத் சஜாத் (தேமுதிக), சாஜி (காங்கிரஸ்) மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததால் அரசியல் கட்சியினர் முற்றுகையை கைவிட்டனர்.
இந்நிலையில், ஆயுதப்படை போலீஸார் நாகேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தவறான நடவடிக்கை களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவ தாகவும் காவல்துறை கண்காணிப் பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.