

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.
அடிப்படை வசதிகளை வலியுறுத்தி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. தண்ணீர் வசதி, உணவுக்கூடம், உணவு வசதி, கழிப்பறை வசதி அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, சில மாணவர்களைக் கைது செய்தது.