Published : 08 Feb 2015 11:11 AM
Last Updated : 08 Feb 2015 11:11 AM

பிஎப் இருப்புத் தொகை அறியும் ஆன்லைன் சேவையில் கோளாறு: உறுப்பினர்கள் பாதிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கை (EPF) ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி தடைபட்டுள்ளதால், உறுப் பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பல்வகை சட்டம் 1952-ன் படி, தொழி லாளர்களிடம் இருந்து மாதந் தோறும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்புநிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் வழங்குகிறது. இந்த தொகைக்கு குறிப்பிட்ட அளவு வட்டி வழங்கப் படுகிறது.

திருமணம், வீடு கட்டுதல், மருத்துவச் செலவு போன்ற வற்றுக்கு இத்தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஊழியர்கள் கடனாகப் பெறமுடியும். ஓய்வு பெறும்போது மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த நிதியில் இருந்து அவர் களுக்கு ஓய்வூதியமும் வழங்கப் படுகிறது.

தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் எவ்வளவு பணம் இருக் கிறது என்பதை ஆன்லைன் மூலம் அறியும் வசதி 2011-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. www.epfochennai.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று வைப்புநிதி கணக்கு எண், செல்போன் எண்ணை பதிவு செய்தால், வைப்புநிதி இருப்பு விவரம் உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தொழி லாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆன்லைன் சேவை தடைபட்டுள்ளது. இதனால், உறுப்பினர்கள் தங் களது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள இருப்பு நிலவரத்தை அறிந்துகொள்ள முடியாமல் அவதிப்படு கின்றனர்.

இதுகுறித்து மண்டல தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆன்லைன் சேவை தடைபட்டிருப்பது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம். அங்கு சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் இது சரிசெய்யப்படும் என தெரி வித்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x