

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களை புறக்கணிக்கக் கூடாது என்று சமக தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக் கப்படுகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால் இதில் கால் பங்கு தொகைக்கூட ஒதுக்கப்படுவதில்லை. தமிழகத் தில் அனைத்து தடங்களிலும் ரயில்கள் லாபத்தில் ஓடுகின்றன. ஆனால் பயணிகளுக்கான வசதி கள் மட்டும் குறைவாக உள்ளன.
மதுரை - கன்னியாகுமரி 2-வது பாதை உட்பட 20-க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்கள் அறிவிப்போடு நிற்கின்றன. ரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன. அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழகத்துக்கு வரவேண்டிய ரயில் திட்டங்களை தடையின்றி நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முன் வரவேண்டும். அதற்கான நிதியை ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.