Published : 22 Feb 2015 12:10 PM
Last Updated : 22 Feb 2015 12:10 PM

குவைத்தில் வேலை: ஆலந்தூரில் நேர்முக தேர்வு

தொலைதொடர்புத்துறையின் மூலம் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு ஆலந்தூர் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு தொலை தொடர்புத் துறையின் மூலம், குவைத் நாட்டு திட்டப்பணி களுக்காக தொலை தொடர்புத் துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை. டிப்ளமோ கல்வியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிவில் மேற்பார்வையாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கொத்தனார், சமையலர் மற்றும் சிவில் பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவத்துடன் ஆட்டோகாட் இயக்குநர் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேர்வு வரும் 26, 27, 28 தேதிகளில் நடக்கிறது.

இதில் பங்கேற்பவர்களுக்காக ஆலந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. மேற்கூறிய தகுதியுள்ள நபர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பணி அனுபவம் மற்றும் கல்வி சான்று ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம், அசல் பாஸ்போர்ட் ஆகிவற்றுடன் மேற்கூறிய நாட்களில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x