Published : 02 Feb 2015 10:47 AM
Last Updated : 02 Feb 2015 10:47 AM

திருவள்ளூரில் மாநகர சாதாரண பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவள்ளூரில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் சொகுசு பேருந்துகளாக உள்ளதால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள தாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, சாதாரணப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே இயக்கப் பட்டு வந்த மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் தற்போது எல்லை விரிவுபடுத்தப்பட்டு திரு வள்ளூர் வரை இயக்கப்படு கின்றன. எனினும், திருவள்ளூரில் இயக்கப்படும் மாநகர பேருந்து கள் அனைத்தும் சொகுசு பேருந்து களாக உள்ளன. சாதாரண பேருந்து கள் இயக்கப்படாததால், கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை உள்ள தாக பயணிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது: திருவள்ளூரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, பெரும்புதூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சொகுசு பேருந்துகளாக இயக்கப்படு கின்றன. இவற்றில் குறைந்தபட்சக் கட்டணமே 7 ரூபாயாக உள்ளது. அதே சமயம், சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3 மட்டுமே.

திருவள்ளூரில் இருந்து ஆவடி, அம்பத்தூர் தொழிற் பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாய். திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் மாநகர விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு பேருந்து கூட சாதாரண பேருந்தாக இயக்கப்படவில்லை. இதனால், நாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டியுள்ளது.

இதேபோல், திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண பேருந்துகளும் தற்போது பெயர் பலகையை மட்டும் மாற்றி விட்டு சொகுசு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

எனவே, சென்னையில் இயக்கப்படுவது போன்று சாதாரணப் பேருந்துகளை திருவள்ளூரிலும் இயக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x