

தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதில் தளராத முயற்சிகளையும், அயராத போராட் டங்களையும் மேற்கொண்டவர் ஜெயலலிதா என்று ஆளுநர் ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை:
மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதில் தளராத முயற்சிகளையும், அயராத போராட்டங்களையும் மேற் கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரி விக்க கடமைப்பட்டுள்ளேன்.
அவரது தொடர் முயற்சி மற்றும் மனோதிடத்தால் மட்டுமே நீரியல், கட்டுமானம் மற்றும் நிலநடுக்க சாத்தியக்கூறு அடிப்படையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றது. அணையின் நீர்மட்டத்தையும் 142 அடி அளவுக்கு உயர்ந்த முடிந்தது. இது தென்மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு கேரள அரசுக்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது கடும் எதிர்ப்பை தமிழக அரசு, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.