Published : 05 Feb 2015 09:41 PM
Last Updated : 05 Feb 2015 09:41 PM

உலக சாதனை படைத்ததற்கு நூல்கள் தந்த அறிவும் காரணம்: புத்தக திருவிழாவில் ‘சிறப்பு’ திறனாளி பெருமிதம்

பெரம்பலூர் புத்தக திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘தன்னம்பிக்கை கொள்’என்ற தலைப்பில் ‘சிறப்பு’ திறனாளி இளங்கோ பேசியது:

தன்னம்பிக்கையுள்ள எந்த மனிதனும் தற்கொலை செய்துகொள்வதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான். அவமானம் நேரும்போதெல்லாம் துவண்டு போகாது, துள்ளியெழ வேண்டும். பார்வையற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்பதற்கு பதிலாக சிறப்புத் திறனாளி என்றழைப்பதே சிறப்பு.

பார்வையற்ற நிலையில், கல்வி பின்னணியற்ற குடும்பத்திலிருந்து வந்த நான், லயோலா கல்லூரியில் தங்கப் பதக்க மாணவனாகத் தேறி, அங்கேயே பேராசிரியராகவும் உயர்ந்தேன். இன்று பெரும்பாலான விளம்பரங்கள் எனது குரலைத் தாங்கி வருகின்றன. மேலும், விளம்பர குரல் பங்களிப்பில் பார்வையற்ற நபர் என்ற வகையில் உலக சாதனை பெற முடிந்ததற்கு எனது திறமை மட்டுமல்லாது, நூல்கள் வாயிலாக நான் பெற்ற அறிவுமே காரணம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x