கேரள அதிகாரிகளுடன் கூட்டுறவு தேர்தல் ஆணையர் ஆலோசனை

கேரள அதிகாரிகளுடன் கூட்டுறவு தேர்தல் ஆணையர் ஆலோசனை
Updated on
1 min read

தமிழகக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் மோகன், கேரளக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழகக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன், கேரளக் கூட்டுறவு சங்கத் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.மதுசூதனன் நாயரை திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினார். இரு மாநிலங்களிலும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் முறைகளை, இரு அதிகாரிகளும் பகிர்ந்து கொண்டதாக அரசு தகவல்கள் தெரிவித்தன.

மேலும் இந்த ஆலோசனையில், கேரள கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணைய செயலர் எல்.சோமன், தமிழக செயலர் வி.நந்தகுமாரி ஆகியோரும் பங்கேற் றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in