சட்டப்பேரவையில் இருக்கை வசதி செய்து தர ஆளுங்கட்சியினருக்கு விருப்பமில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருக்கை வசதி செய்து தர ஆளுங்கட்சியினருக்கு விருப்பமில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் தனக்கு சிறப்பு இருக்கை செய்து தர ஆளுங்கட்சியினருக்கு விருப்ப மில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனைத் தவிர, எஞ்சிய திமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் ஏற்பட்டுள்ள நஷ்டம், சாலைகளின் நிலை, தாது மணல் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டதாக திமுக வட்டாரங்கள் கூறின.

கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவையில் என்னை கேள்வி கேட்க அனுமதிப்பார்களா? சட்டப்பேரவையில் எனக்கு இருக்கை வசதி செய்து தருவதற்கு ஆளுங்கட்சியினருக்கு விருப்பம் இல்லை. ஏற்கெனவே இருக்கை வசதி செய்து தர வேண்டி கேட்ட நிலையில், மீண்டும் கேட்க விருப்ப மில்லை. திமுக எம்எல்ஏ-க்கள் பொருந்தக்கூடிய காரணங்களுக்கு மட்டுமே வெளிநடப்பு செய் கிறார்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in