Published : 23 Feb 2015 11:29 AM
Last Updated : 23 Feb 2015 11:29 AM

நாமக்கல் அருகே கொடூரம் - தாய், மனைவி, சகோதரர் கொலை: விவசாயி தற்கொலை

நாமக்கல் அருகே தாய், மனைவி மற்றும் சகோதரர் கொலை செய் யப்பட்ட நிலையில், விவசாயி தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தி ரம் ஒலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செட்டியம்மாள் (75). இவரது கணவர் நஞ்சேகவுண்டர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேலு (50). இவர்களுடன் செட்டியம்மாள் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் செட்டியம்மாள் வீ்ட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. வீட்டுக் கதவும் உள்பக்கமாக பூட்டியிருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் புதுச்சத்திரம் போலீ ஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் ஆட்டுக் கொட்டகையில் காளியண்ணன் மற்றும் செட்டியம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். மேலும், உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் இருந்த பழனிவேலு வீட்டின் கதவில், ‘கதவை யாரும் திறக்கக் கூடாது. ஆட்சியர், போலீஸார் முன்னிலையில் கதவை திறக்க வேண்டும்’ என்று பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

ஆவணங்கள் எரிப்பு

கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பழனிவேலு தூக்கில் தொங் கிய நிலையிலும், அவரது மனைவி மணி கொலை செய்யப்பட்டும் கிடந்தனர். வீட்டின் உள்ளே ரூபாய் நோட்டுகள் கிழித்தும், நாணயங்கள் சிதறடிக்கப்பட்டும், நிலம் தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டும் கிடந்தன.

போலீஸார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில், செட்டியம்மாள் மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமாக ஆறரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. காளியண்ணன் மனநலம் பாதிக்கப் பட்டவர். பழனிவேலுவின் முதல் மனைவி இறந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மணி என்பவரை இரண்டாவதாக திரு மணம் செய்திருப்பது தெரிந்தது. எனினும், கொலைக்கான முழு விவரம் உடனடியாக தெரிய வில்லை. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் விசராணை நடத்தினார்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாய், சகோதரர் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு, பழனிவேலு தற் கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

இருப்பினும் தூக்கில் பிணமாக தொங்கிய பழனிவேலுவின் ஆடையில் மூவரையும் கொலை செய்ததற்கான ரத்த கறை உள்ளிட்ட தடயங்கள் எதுவும் சிக்காததால், வேறு யாருக்கேனும் கொலையில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x