

வனக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையைத் தீர்க்காமல், அரசு வேடிக்கை பார்த்து வருவது சரியல்ல என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.
கோவை சிங்காநல்லூரில் திமுக சார்பில் மகளிர் தினவிழா வரும் மார்ச் 7, 8 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடு களை பார்வையிட கோவைக்கு நேற்று வந்த கனிமொழி, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. இந்த அரசு மீது மாணவர்களும் நம்பிக்கை இழந்துள்ளதை இந்தப் போராட்டம் காட்டுகிறது. மின் கட்டண உயர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் தெரிவிக்கிறார். இதன் பாதிப்பு, வரும் தேர்தலில் எதிரொலிக்கும். மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.