புதுச்சேரிக்கு வந்த பாரம்பரிய கார்கள் சென்னை புறப்பட்டன

புதுச்சேரிக்கு வந்த பாரம்பரிய கார்கள் சென்னை புறப்பட்டன
Updated on
1 min read

புதுச்சேரிக்கு வந்த பாரம்பரிய கார்கள் நேற்று சென்னைக்கு புறப்பட்டன. அதனை அமைச்சர் ராஜவேலு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பாக ‘தி இந்து‘ ஆதரவோடு நேற்று முன்தினம் புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் 1927, 1933 உள்ளிட்ட ஆண்டுகளில் தயாரான ஆஸ்டின், சிட்ரன், டாட்ஜ், சிங்கர், பீட்டில், மாஸ்டங்க், ஜாகுவார், போர்டு, பேன்சி, பியேட் போன்ற பல்வேறு வகை கார்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சிக்கு சென்னையில் இருந்து 50 கார்களும், பொள்ளாச்சியில் இருந்து 8 கார்களும், புதுச்சேரியை சேர்ந்த 12 கார்களும் மற்றும் 10 மோட்டார் பைக்குகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. புதுப்பொலிவுடன் ஜொலித்த பாரம்பரிய கார்களை புதுச்சேரிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் அந்த கார்களின் முன்பு நின்றபடி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

கண்காட்சி முடிவடைந்த நிலையில் நேற்று பாரம்பரிய கார்கள் அனைத்தும் புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றன. இந்த கார்களை அமைச்சர் ராஜவேலு கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது சுற்றுலாத்துறை இயக்குநர் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in