

சென்னை பெங்களூர் இடையி லான சாலையில் உள்ள 7 சுங்கச் சாவடிகளில் ஒரு வாரத்தில் மின்னணு கட்டண வசூல் முறை அறிமுகமாகவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 184 சங்கச் சாவடி மையங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற் றின் கட்டுப்பாட்டில் 4,832 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. தமிழகத்தில்தான் அதிகளவில் 42 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன.
இங்கு சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கட்டணம் வசூலிப்பதை எளிமையாக்கும் வகையில் சுங்கச்சாவடிகளில் ‘மின்னணு கட்டண வசூல்’ முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை பணிகள் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலைகளில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் இந்த புதிய முறை அறிமுகமாக உள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்த காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. எனவே, கட்டணத்தை வசூலிக்க ‘மின்னணு கட்டணம் வசூல் ’ முறையை அமல்படுத்தவுள் ளோம். புதிய முறையில் சேர விரும்புபவர்களின் வாகனத்தின் முன்பகுதியில் மின்னணு சென் சார் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும். அவர் கள் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துகொள்வது போல், சுங்கச் சாவடிகளில் உள்ள மையங் களில் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை கொடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அவர்களின் வாக னங்கள் சுங்கச்சாவடியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் வந்த வுடனே, அதற்கான கட்டணம் அவர்களின் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். இதற் காக பல்வேறு வங்கிகளுடன் ஒப் பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொடக்கத்தில் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதற்காக 2 பாதைகளை தனியாக அமைக்க வுள்ளோம். இதனால், நெடுஞ் சாலைகளில் வாகன நெரிசல் குறை யும், பயணிகளின் நேரம் வீணாவ தையும் குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.