

செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் குறித்த தேசியக் கருத்தரங்கம் 25-ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு ராணிமேரி கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
நேற்று நடைபெற்ற கருத்தரங்குக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா.அழகரசன் தலைமை யேற்றார். இந்த அமர்வில் ராணிமேரி கல்லூரியின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் ப.பத்மினி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சி.சாவித்திரி, பொன் னேரி உலகநாதன் நாராயணசாமி அரசுக் கல்லூரியின் ஆங்கில உதவிப் பேராசிரியர் சா.சிவசுப்பிரமணியம், முனைவர் இரா.அருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.