

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் கருணாநிதி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதி தனது ட்விட்டரில், "டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிர்வாக ரீதியிலான உதவிகளை மத்திய அரசு செய்ய முன்வந்துள்ளது. மக்கள் மனநிலையை உணர்த்து தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் என தமிழக தலைவர்கள் பலரும் நேற்றே கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.