தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு நடைபெறும் என சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார்.

பின்னர், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. புதன், வியாழன், வெள்ளி, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in