கணைய புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

கணைய புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்
Updated on
1 min read

அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடலியல் மருத்துவர்கள் பிரசன்னகுமார் ரெட்டி, டி.ஜி.பாலசந்தர் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்தல், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகி யவை புற்றுநோய் வருவதற்கான காரணிகளாக உள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புற்றுநோயை கண்டுபிடிப்பதும், அதற்கு சிகிச்சை அளிப்பதும் எளிதாகியுள்ளது.

நோய் முற்றிய நிலையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப் படுவதால் தான் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் புற்று நோயால் உயிரிழப்போரில் மார்ப கப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. கணைய புற்றுநோய் 4-வது இடத்தில் உள்ளது. தற்போது கணைய புற்றுநோயால் உயிரிழப்போர் அதிகரித்து வருகின் றனர். மார்பக புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக் கையை கணைய புற்றுநோய் விரைவில் கடந்துவிடும்.

மேற்கத்திய நாடுகளில்தான் கணைய புற்றுநோய் அதிக மாக இருந்தது. தற்போது இந்தியாவிலும் அது அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

வயிற்றில் கடுமையான வலி, எடை குறைவு போன்ற காரணங்கள் தெரிய வந்தவுடன், சுய மருத்துவம் செய்து கொள்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இது கணைய புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். கணைய புற்றுநோயை தொடக்கத் திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in