

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிக ளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், நேற்று மாலை சென்னை வந்தார். அவர், இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து கடத்தல் சம்பவம் குறித்து விளக்கு கிறார்.
தேவகோட்டையைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், சமூக சேவைக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவரை தீவிரவாதிகள் கடத்தி, பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவரை மீட்க வேண்டும் என குடும்பத்தினரும் தமிழக அரசியல் கட்சிகளின் தலை வர்களும் மத்திய, மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ் தான் அரசுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடியில் இருந்த அலெக்சிஸ் பிரேம்குமார் கடந்த 22-ம் தேதி விடுவிக்கப் பட்டார். அன்று மாலையே டெல்லிக்கு அழைத்து வரப் பட்ட பாதிரியாரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்று ஹோட்டலில் தங்க வைத்தனர். கடத்தல் சம்பவம் குறித்து அவரிடம் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, அலெக்சிஸை அழைத்து வர அவரது தந்தை அந்தோணிசாமி, தம்பி ஜான் ஜோசப், தங்கை எலிசபெத் ராணி ஆகியோர் டெல்லி சென்றி ருந்தனர். அவர்கள் அலெக்சிஸை சந்தித்துவிட்டு நேற்று காலை சென்னை திரும்பினர். அப்போது அந்தோணிசாமி கூறும்போது, ‘‘என் மகனை பத்திரமாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எங்கள் கிறிஸ்தவ சபைதான் அவனை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. விசாரணை முடிந்ததும் அலெக்சிஸ் விரைவில் தமிழகம் வருவான்’’ என தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று மாலை 5.45 மணியளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘நான் நலமாக இருக்கிறேன். நான் தாயகம் திரும்ப பெரும் உதவியாக இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கும், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
சென்னை லயோலா கல்லூரி யில் இன்று காலை 11.30 மணி அளவில் நிருபர்களை அலெக்சிஸ் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அப்போது, தான் கடத் தப்பட்டது குறித்து அவர் விரிவாக தெரிவிப்பார் என தெரிகிறது.