

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவது பற்றிய ஒருநாள் வழிகாட்டி கல்விக்கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.
பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த கல்விக் கண்காட்சியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 33 உயர் கல்வி நிறுவனங்கள் கலந்துகொள் கின்றன. பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.
கல்விக் கண்காட்சி குறித்து பிரிட்டிஷ் கவுன்சில் மெய்க்வி பார்க்கர் கூறுகையில்,” 600 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆவணங் கள் சரியாக இருந்தால் இந்திய மாணவர்களுக்கு உடனடியாக விசா அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களை பெரிதும் வரவேற்கின்றன. அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது” என்றார்.