

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவுக்கு மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால், பூமிக்கடியில் 2000 முதல் 6000 அடி வரை ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படும். 2000 அடிக்கு கீழ் பக்கவாட்டில், சுமார் 2 கி.மீ. வரை 600 க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடிவைத்து தகர்க்கப்படும்.
அப்போது பக்கவாட்டில் இருந்து வெளிப்படும் தண்ணீரை குழாய்கள் மூலம் வெளியேற்று வர். மீத்தேன் எரிவாயுவும், வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரும் வெளியேறும். அதிலிருந்து மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக் கப்படும். மீதியிருக்கும் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீர் விவசாய நிலங்களில் வெளியேற் றப்படுவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படும்.
மேலும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரில் கலக்கும். இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப் படுவர். எனவே, மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் வாசன் கூறியுள்ளார்.