Published : 11 Feb 2015 11:04 AM
Last Updated : 11 Feb 2015 11:04 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: தலைமை நீதிபதி அமர்வை அணுக உத்தரவு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஸ்ரீரங்கத்தில் மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். மக்கள் பாதுகாப்பு கழகப் பொதுச் செயலர் பாத்திமா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

ஸ்ரீரங்கத்தில் அதிமுகவினர் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அனுதாபம் ஏற்படும் வகையில் அம்மா மண்டபத்தில் 2 கி.மீ. தொலைவுக்கு டிஜிட்டல் போர்டுகளை வைத்துள்ளனர். இதற்காக மின்சாரத்தைத் திருடியுள்ளனர்.

அதிமுகவினரின் விதிமீறல் களை போலீஸார் கண்டுகொள்வ தில்லை. அரசு இயந்திரம் முழுமை யாக அதிமுகவுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆளும் கட்சியினர் மீது இதுவரை 600 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்புகார் கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், ‘தேர்தல் தொடர்பான மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு முன்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி இந்த மனுவை இங்கு விசாரிக்க முடியாது’ என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கணேசன் வாதி டும்போது, இது தேர்தல் தொடர்பு டைய மனு அல்ல. தேர்தல் விதிமீற லில் ஈடுபட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கும்படி அதிகாரி களுக்கு அனுப்பிய மனு என்றார்.

இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், இந்த மனுவில் முதல் எதிர்மனுதாரராக தமிழக தேர்தல் ஆணையர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனுவை இங்கு விசாரிக்க முடியாது என்றார். இதையடுத்து மனுவை விசாரிக்க மறுத்து, மனுவை மனுதாரரிடம் உடனடியாக திரும்ப வழங்க பதிவுத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x