Published : 20 Feb 2015 10:10 AM
Last Updated : 20 Feb 2015 10:10 AM

பஸ் படிக்கட்டு உடைந்து 3 மாணவர்கள் காயம்: பெண் தலையில் விழுந்த கைப்பிடி கம்பி

பஸ்ஸின் படிக்கட்டு உடைந்து விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி யில் இருந்து தாம்பரம் நோக்கி மாநகர பஸ் (தடம் எண் 266) சென் றது. கூட்டம் அதிகமாக இருந்த தால் படிக்கட்டுகளில் ஏராளமா னோர் தொங்கியபடி பயணம் செய்தனர். பம்மல் அருகே குண் டும் குழியுமான சாலையில் பஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியது. அப்போது பஸ்ஸின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது.

இதனால் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கீழே விழுந்த னர். சிலர் பஸ்ஸின் பக்கவாட்டு கம்பிகளை பிடித்தபடி தொங்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் கூச்ச லிட்டனர். உடனடியாக ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்ஸின் 2 படிக்கட்டுகள் உடைந்து விழுந்திருந்தது. கீழே விழுந்த 3 மாணவர்களுக்கும் கை, கால்கள், உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. மற்ற பயணிகள் 3 பேரை யும் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை வள்ளலார் நகரில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் (தடம் எண் 56) சென்றது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்த தால் ஏராளமானோர் நின்றுகொண்டு பயணம் செய்தனர். அவர்களில் பலர் மேல்புற கைப்பிடிக் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் அருகே பஸ் வந்தபோது மேல்புற கம்பி திடீரென கழன்று விழுந்தது. இதில் எண்ணூரை சேர்ந்த லட்சுமி என்பவரின் தலையில் கம்பி பலமாக தாக்கியதில் அவரின் தலையில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமைனையில் லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x