பணியாளர்களை தேர்வு செய்யும்போது நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் என்ன? - சி.ஐ.ஐ. மாநாட்டில் தொழிலதிபர்கள் பட்டியல்

பணியாளர்களை தேர்வு செய்யும்போது நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் என்ன? - சி.ஐ.ஐ. மாநாட்டில் தொழிலதிபர்கள் பட்டியல்
Updated on
1 min read

பணியாளர்களை தேர்வுசெய்யும்போது நிறுவனங்கள் என்னென்ன திறமைகளை எதிர்பார்க்கின்றன என்ற விவரங்களை சி.ஐ.ஐ. மாநாட்டில் தொழிலதிபர்கள் பட்டியலிட்டனர்.

மேலாண்மை கல்வி மாநாடு

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் மேலாண்மை கல்வி தொடர்பான 2 நாள் மண்டல மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை ஃபிக்கி துணை தலைவரும், ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்தின் இயக்குநருமான நவ்ஷத் ஃபோர்ப்ஸ் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பொதுவாக பணியாளர்களை வேலைக்கு தேர்வுசெய்யும்போது, அவர்களின் அடிப்படை தகுதிகள், பின்னணி, குறிப்பிட்ட துறையில் பெற் றுள்ள நிபுணத்துவம் போன்றவை கருத் தில்கொள்ளப்படும். பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் பெற்றுள்ளார்களா? சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை இருக் கிறதா என்றெல்லாம் நேர்முகத் தேர்வின் போது ஆராயப்படும். ஆனால், இத்தகைய திறமைகள் குறித்து பாடப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்காது.

அதேபோல், பல்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் குழு உணர்வு இருக்கிறதா என்பதையும் நாங்கள் பார்க்கிறோம். மேலும், ஆராய்ச்சி மனப்பான்மையும் முக்கியம். நேர்முகத்தேர்வில் இத்தகைய திறமைகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

முருகப்பா குழுமத்தின் துணைத்தலை வர் எம்.எம்.முருகப்பன் பேசும்போது, “இன்றைய காலத்தில் தெருவோர வியா பாரம் முதல் மிகப்பெரிய வணிகம் வரை அனைத்தும் உலகமயமாகிவிட்டது. இத்த கைய சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை கையாளக்கூடிய திறமை அவசியம். புதுமையாக சிந்திக்கும் வகையில் அதற் கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பது கல்வி நிறுவனங் களின் கடமையாகும். சுயமாக தெரிந்து கொள்ளும் திறனை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, சிஐஐ தென்மண்டல கல்வி துணைக்குழு தலைவர் சி.ஆர்.சுவாமி நாதன் மாநாட்டுக்கு வந்தவர்களை வரவேற்றார். சென்னை பிசினஸ் ஸ்கூல் இயக்குநர் ஜெ.என்.அம்ரோலியா நிறைவுரை நிகழ்த்தினார். மாநாட்டில், மேலாண்மைக் கல்லூரி பேராசிரியர்கள், எம்பிஏ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இன்று (12-ம் தேதி) நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in