ஸ்ரீரங்கம் தேர்தல்: ரூ.47லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி சக்சேனா தகவல்

ஸ்ரீரங்கம் தேர்தல்: ரூ.47லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி சக்சேனா தகவல்
Updated on
1 min read

ஸ்ரீரங்கத்தில் இதுவரை கணக்கில் வரப்படாத 47லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்தீப் சக்சேனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

'' ஸ்ரீரங்கத்தில் அதிமுகவினர் உணவு வழங்குவதாக திமுக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு உணவு வழங்கியிருந்தால் அது குற்றம்தான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்கு பதியப்படும். அதிமுக வேட்பாளாரின் செலவுக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இதுவரை கணக்கில் வரப்படாத 47லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்படும்.

பிப்ரவரி 11 மாலை 5மணி முதல் பிப்ரவரி 13 மாலை 5மணி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி வாக்காளர்கள் வாக்களிக்காதவாறு தடுக்க தனிப்பட்டியல் வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கப்படும். இந்தப் பட்டியல் தேர்தலுக்கு 2நாட்கள் இருக்கும் முன்பே வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். '' என்று சக்சேனா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in