Published : 26 Feb 2015 09:38 AM
Last Updated : 26 Feb 2015 09:38 AM

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் >www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று இரவு வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x