Published : 14 Feb 2015 09:57 AM
Last Updated : 14 Feb 2015 09:57 AM

தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், குற்றிக் காட்டு விளையைச் சேர்ந்த டி.ராஜா சிங், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தனியார் பள்ளி களில் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் எனத் தனியார் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழு ஏற்கெனவே அறிவித் துள்ளது. தமிழகத்தில் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ் நாடு பள்ளிகள் (கல்விக் கட்டண வரைமுறைப்படுத்தல்) சட்டம் ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஐசிஎஸ்இ பள்ளிகளில், கல்விக் கட்டணக் குழு நிர்ணயம் செய்ததைவிட அதிகளவு கட்டணம் வசூல் செய்கின்றனர்.

மேலும், தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கி, அவர்களுக்கு இலவச கல்வி அளிப்பது கட்டாயமாகும். ஆனால், தனியார் பள்ளிகள் இதை நிறைவேற்றுவதில்லை.

எனவே, தமிழகத்தில் ஐசிஎஸ்இ பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்ட ணம் வசூலிப்பதை கண்காணிக் கவும், தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இ.வி.என்.சிவா வாதிட்டார்.

இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மாநில பள்ளிக் கல்விச் செயலர், தனியார் பள்ளிக் கல்விக் கட்டணக் குழுவின் தனி அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x