ஜெயலலிதா பிறந்த நாள் விழா: திரைப்பட வர்த்தக சபை சார்பில் 6,700 பேருக்கு இலவச சேலை

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: திரைப்பட வர்த்தக சபை சார்பில் 6,700 பேருக்கு இலவச சேலை
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளையொட்டி 6,700 பேருக்கு இலவச சேலைகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடக் குழு தலைவர் சி.கல்யாண் வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலி தாவின் 67-வது பிறந்தநாளை யொட்டி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென் னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச் சியில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வர்த்தக சபைத் தலைவர் சசிகுமார், துணைத் தலைவர்கள் சங்கையா, விஜயகுமார், சுப்ரமணியம், கவுரவ செயலாளர்கள் கட்ரகட்டா பிரசாத், டி.எ.அருள்பதி, கட்டிடக் குழு ஒருங் கிணைப்பாளர் ரவி கொட்டாரகரா, பொருளாளர் கே.முரளிதரன், செயற் குழு உறுப்பினர் ஏ.எஸ்.பிரகாசம் உள் ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடக் குழு தலைவர் சி.கல்யாண், 6,700 பேருக்கு இலவச சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக வர்த்தக சபை சார்ந்த தொழிலாளர்களுக்கு சேலைகளை வழங்கி அவர் பேசியதாவது:

ஜெயலலிதாவின் அனுமதி பெற்று இலவச சேலைகளை வழங்குகிறோம். இங்கு மட்டுமின்றி அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடக்கும். கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் 6,600 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கினோம். அதேபோல இந்த ஆண்டு 6,700 பேருக்கு இலவச சேலை வழங்குவதை பெருமையாக நினைக்கிறோம்.

இவ்வாறு கல்யாண் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in