

எம்.ஆர்.எப். தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தொழிலாளர்களை பழிவாங் கும் நோக்கில் பணியிடை நீக்கம் செய்வது, சம்பளத்தில் பிடித்தம் செய்வது, பணிநீக்கம் போன்ற வேலைகளில் எம்.ஆர்.எப். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இத னால் அங்கு பணியாற்றும் தொழி லாளர்களின் பணிச்சூழல் அச் சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
தொழிலாளர் நலச் சட்டங் களையும் அந்நிறுவனம் காலில் போட்டு மிதித்து வருகிறது.
எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன், வெங்கடேஷ் ஆகியோர் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.