

அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, "அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 4,640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு தற்போது கிடைத்து வருகிறது.
எனவேதான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டு மின் தேவையை தன்னிறைவை எய்தும் நிலையை எட்டிக் கொண்டு இருக்கிறோம்.
112 மெகாவாட் சூர்ய ஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் தனியார் மூலம் நிறுவப்பட்டு அந்த மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இதுவரை பதிவு செய்த சூரிய மின் உற்பத்தியாளர்களுடன் சூரிய கொள்முதல் ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தும்" என்றார்.