பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: சன் டிவி ஊழியர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: சன் டிவி ஊழியர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது அவரது வீட்டில் இருந்த 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரிஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சிபிஐ அண்மையில் கைது செய்தது.

மூன்று பேரும் சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களது காவல் நேற்றுடன் முடிந்ததால், சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களது நீதிமன்றக் காவலை 18-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in