Published : 28 Feb 2015 10:33 AM
Last Updated : 28 Feb 2015 10:33 AM

இடுப்பு எலும்பு முட நீக்கியலில் புதிய தொழில்நுட்பம்: சென்னை அப்போலோ மருத்துவமனை அறிமுகம்

இடுப்பு எலும்பு முட நீக்கியலில் ‘ஹிப் ஆர்த்ரோஸ்கோபி’ என்னும் புதிய தொழில்நுட்பத்தை அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘எலும்பியல் மற்றும் விளையாட்டுகளில் காயம் அடைபவர் களுக்கான சிகிச்சை’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அப்போலோ மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தேனாம் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, இடுப்பு எலும்பு முட நீக்கியலில் ‘ஹிப் ஆர்த்ரோஸ்கோபி’ என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை யின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது:

பொதுமக்களின் எதிர்பார்ப் புக்கு ஏற்ப அப்போலோ மருத்துவமனை பல்வேறு நவீன மருத்துவமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய மருத்துவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மருத் துவர்களை வரவழைத்தும், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமும் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இந்த சூழலில் ‘ஹிப் ஆர்த்ரோஸ்கோபி’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள் ளோம். இதற்கு முன் உள்ள தொழில்நுட்பங்களில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இடுப்பு எலும்பில் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியில் ஒரு சிறு துளை மூலம் ‘ஹிப் ஆர்த்ரோஸ்கோபி’ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி குறைந்த நாட்களிலேயே பூரண குணமடைய முடியும். ரத்தக் கசிவும் மிகக்குறைவான அளவே இருக்கும். இந்த தொழில்நுட் பத்தை உலகின் மிகச்சில மருத்துவமனைகளே வழங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, அமெரிக்காவை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோனாத்தான் சலுட்டா, கொரியாவை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் கிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x