பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை: வருகிற 9-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்

பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை: வருகிற 9-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதூர் தொழிற்பூங்கா பகுதியில் உள்ள நோக்கியா செல்போன் தொழிற்சாலை வளாகத்தில், செல் போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிற் சாலை இயங்கி வந்தது. இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப் படையில் சுமார் 8,000 தொழிலாளர் கள் பணிபுரிந்து வந்தனர்.

இதனிடையே, கடந்தாண்டு நவம்பரில் நோக்கியா தொழிற் சாலை மூடப்பட்டதையடுத்து, போதிய ஆர்டர்கள் இல்லை என்று கூறி உற்பத்தியைக் குறைத்தது பாக்ஸ்கான் தொழிற்சாலை. இதனால், தொழிலாளர்கள் 6,400 பேர் வேலையிழந்தனர். தொடர்ந்து, 1,600 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிய தொழிற்சாலையில் டிச. 24-ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழிற்சாலையை மீண்டும் திறப்பது தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர் பாக தொழிற்சாலை வளாகத்துக் குள் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்கள் ஒவ்வொருவருக் கும் பணி முடித்த காலத்திலிருந்து 2 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை ஸ்டாண்டர்டு ஊதியம் மற்றும் தொழிற்சாலை சார்பில் ரூ. 50,000, பணி மூப்புத் தொகை, பணி மூப்பு பரிசுத் தொகையாக ரூ. 2,000, விடுப்புத் தொகை, போனஸ் தொகை ஆகியவற்றை வழங்க தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எனவே, தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வருகிற 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் தொழிற்சாலை மனிதவள மேலாளரை நேரில் அணுகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். நேரில் வரத் தவறும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை மட்டும் அவரவர் வங்கிக் கணக்கில் வருகிற 10-ம் தேதி செலுத்தப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருகிற 10-ம் தேதிதான் தொழிற்சாலையின் கடைசி வேலை நாளாகும், அன்று வரை மட்டுமே நிர்வாகம் செயல்படும் என்றும் 2015 ஜனவரி மாத ஊதியம் மற்றும் பிப். 10-ம் தேதி வரையான ஊதியம் ஆகியன தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in