

நாட்டுபடகுகள் மற்றும் சில்லரை மீன் விற்பனையில் பயன்படுத் தும் வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் தயா ரிப்பது மற்றும் பழுது நீக்கம் செய் வது தொடர்பான பயிற்சி, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம் ரூ. 5.4 லட்சம் மதிப்பில் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், நீலாங் கரையில் உள்ள தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் தமிழ் நாடு தலைமை மீனவர் கூட்டுறவு இணையத்தின் தலை வர் சேவியர் மனோகரன் முன் னிலையில், மீன்துறை ஆணையர் பீலாராஜேஸ் நேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
சூரிய ஒளிவிளக்குகள் தயாரிப்பதன் நோக்கம், சூரிய ஒளி மின்சாரத்தின் சிறப்புகள், பராமரிக்கும் முறை, பரிசோதனை வழிமுறைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு இணையத்தின் இணை இயக்குநர் ஆறுமுகம், சென்னை மண்டல மீன்துறை இணை இயக் குநர் ஜூடுஆம்ஸ்ட்ராங், காஞ்சி புரம் மீன்துறை உதவி இயக்குநர் ஜூலியஸ் எட்வர்ட் மற்றும் மீனவ பெண்கள் கலந்துகொண் டனர்.