Published : 16 Feb 2015 10:29 AM
Last Updated : 16 Feb 2015 10:29 AM

இயல் இசை நாட்டிய விழா நாளை தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பில் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் “இயல் இசை நாட்டிய விழா” காஞ்சிபுரத்தில் உள்ள அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவை அமைச்சர் சின்னையா தொடக்கி வைத்து விருதுகள் வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு “மக்களுக்கு நற்கருத்துகளை வழங்கியது சமய இலக்கியங்களே? சமுதாய இலக்கியங்களே? என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. 18 மற்றும் 19-ம் தேதிகளில் பல்வேறு கலைக் குழுக்களின் பரத நாட்டியம், திருமுறை இசை, இசை சொற்பொழிவு, திருவருட்பா இசை ஆகியவை நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x